வியாபாரியிடம் பணம் பறித்த 2 பேர் பிடிபட்டனர்
வியாபாரியிடம் பணம் பறித்த 2 பேர் பிடிபட்டனர்;
கோவை நீலிகோணம்பாளையத்தை சேர்ந்தவர் மாரசாமி (வயது 57). இவர் கோவை காமராஜர் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் கடையில் இருந்த போது 2 பேர் வந்து சிகரெட் கேட்டு வாங்கினர்.
அவர்களிடம் சிகரெட் கொடுத்து விட்டு மாரசாமி பணம் கேட்டு உள்ளார். ஆனால் அவர்கள் பணம் தர மறுத்ததுடன் கத்தியை காட்டி மிரட்டி மாரசாமியிடம் ரூ.170-ஐ பறித்து விட்டு தப்பி சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாரசாமியை மிரட்டி பணம் பறித்த குனியமுத்தூர் இடையர்பாளையத்தை சேர்ந்த சுமேஷ் (26), உப்பிலிபாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (26) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.