புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
மங்கலம்பேட்டை,
மங்கலம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் கர்ணத்தம், கோ.பவழங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கர்ணத்தம் கிராமத்தை சேர்ந்த குமார் மனைவி ஈஸ்வரி (வயது 45), கோ.பவழங்குடியைச் சேர்ந்த செல்வராசு(63), ஆகியோர் தங்களது பெட்டிக்கடைகளில் வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.