சின்னசேலம் அருகேமது பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது

சின்னசேலம் அருகே மது பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-04-08 18:45 GMT


சின்னசேலம், 

சின்னசேலம் அடுத்த கீழ்குப்பம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, நயினார்பாளையம் டாஸ்மாக் கடை அருகே வைத்து, மதுபாட்டில்கள் விற்ற தியாகதுருகம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த கருணாகரன் மகன் விஜய் (வயது 40) என்பவரை கைது செய்து, 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல கூகையூர் அரசு மதுபான கடை அருகே மதுபாட்டில்கள் விற்ற, வீரபயங்கரம் நடுத்தெருவை சேர்ந்த குமரப்பிள்ளை (வயது 58) என்பவரையும் போலீசார் கைது செய்து, 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்