சாராயம், மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது
சாராயம், மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே கலிஞ்சிக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவில் வளவனூர் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த புகழ் (வயது 28), சரவணன் என்கிற சந்திரன் (26) ஆகியோர் தங்கள் வீட்டில் சாராயம் மற்றும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 225 மதுபாட்டில்கள், 5 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.