மதுவிற்ற 2 பேர் கைது

மதுவிற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-06-08 18:45 GMT

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை போலீஸ் சரகம் பீர்க்கலைக்காடு அரசு பள்ளி அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த நாகராஜ்(வயது 54), ராமலிங்கம்(54) ஆகியோர் மது பதுக்கி விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 65 மது பாட்டில்கள், மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்