தென்தாமரைகுளம்,
தென்தாமரைகுளம் அருகே உள்ள கரம்பவிளை, ஆண்டிவிளையில் மது விற்பனை நடைபெறுவதாக தென்தாமரைகுளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று மது விற்பனையில் ஈடுபட்ட நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்த கண்ணன், தேரிவிளையை சேர்ந்த பால்பாண்டியன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 21 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.