சாராயம் விற்ற 2 பேர் கைது

மணல்மேடு அருகே சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-23 18:45 GMT

மணல்மேடு:

மணல்மேடு அருகே சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரகசிய தகவல்

மணல்மேடு அருகே கொற்கை கிராமத்தில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

சாராயம் விற்பனை

அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் கொற்கை கிராமம் சாலைத்தெரு மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ஸ்டாலின் (வயது 65), கொற்கை அம்பேத்கர் தெருவை சேர்ந்த திருநாவுக்கரசு (55) என்பதும், அவர்கள் 2 பேரும் சாராயம் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

2 பேர் கைது

இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்டாலின், திருநாவுக்கரசு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்