மது, புகையிலை விற்ற 2 பேர் கைது

மது, புகையிலை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-08-27 20:00 GMT

கோத்தகிரி

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? மற்றும் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா என கோத்தகிரி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ரகுமான் கான் மற்றும் போலீசார் கோத்தகிரி கடைவீதி பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்த போது, அங்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளரான லோகநாதன் (வயது 56) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து கோத்தகிரி டான்போஸ்கோ சாலையில் போலீசார் ரோந்துப்பணியில் இருந்த போது, ஒருவர் கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்வது தெரியவந்தது. விசாரணையில் அவர் கொணவக்கரை கிராமத்தை சேர்ந்த மனோஜ் (31) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 11 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்