சென்னிமலையில் உள்ள வாரச்சந்தை அருகில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக சென்னிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சென்னிமலை மேலப்பாளையத்தை சேர்ந்த நாகராஜ் (வயது 58) என்பதும், அந்த பகுதியில் நின்று கொண்டு சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 30 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் கோபி அருகே உள்ள வெள்ளை பாறை மேடு பகுதியில் சிறுவலூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோபியை சேர்ந்த சிவகுமார் (வயது 31) என்பவர் சட்ட விரோதமாக அதிக விலைக்கு மது விற்க 6 பாட்டில்கள் வைத்திருந்ததாக கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.