திசையன்விளை:
திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் திசையன்விளை பைபாஸ் ரோடு மற்றும் தலைவன்விளை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு அரசு மதுபான கடையில் மதுபாட்டில்களை வாங்கி வந்து அதை கூடுதல் விலைக்கு விற்பனை செய்துகொண்டிருந்ததாக குலசேகரன்பட்டிணம் முனிஸ்வரன் மகன் அஜய் (வயது 21), ஆயன்குளம் செல்வராஜ் (51) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 மதுபாட்டில்களையும் ரூ. 12 ஆயிரத்து 50-ஐயும் பறிமுதல் செய்தனர்.