மது விற்ற 2 பேர் கைது

சிவகிரியில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-01 18:45 GMT

சிவகிரி:

சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் தலைமையில் போலீசார், விஸ்வநாதப்பேரி, வடக்குச்சத்திரம் போன்ற பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தெற்குசத்திரம் பிள்ளையார் கோவில் அருகில் மது விற்பனை செய்ததாக, சிவகிரி அருகே தேவிப்பட்டணம் நடுவூர் ராமசாமியாபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த கருப்பையா மகன் முனீஸ்வரன் (வயது 38), வாசுதேவநல்லூர் கலைஞர் காலனி தெருவைச் சேர்ந்த சின்ன மாரியப்பன் மகன் ஜெயசூர்யா (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 300 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்