பட்டாசு பதுக்கிய 2 பேர் கைது

பட்டாசினை பதுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-23 19:47 GMT

சிவகாசி, 

சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமதுஅப்துல்காதர் மற்றும் போலீசார் சிவகாமிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு கடையின் அருகில் தகர செட் அமைத்து அதில் அனுமதியின்றி பல்வேறு வகையான பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்த சாமுவேல்ராஜ் மகன் திரவியராஜ் (வயது37) என்பவரை கைது செய்தனர். அதேேபால் பாரதிநகர் பஸ் நிறுத்தம் அருகில் முத்தமிழ்புரம் காலனியை சேர்ந்த அருணாச்சலம் (32) என்பவருக்கு சொந்தமான இடத்தில் உரிய அனுமதியின்றி 3 அட்டை பெட்டிகளில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்து அருணாச்சலத்தை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்