கடைக்காரரை தாக்கி பணம் பறித்த 2 ேபர் கைது
நாகமலைபுதுக்கோட்டை அருகே கடைக்காரரை தாக்கி பணம் பறித்த 2 ேபர் ைகது செய்யப்பட்டனர்.
நாகமலைபுதுக்கோட்டை,
நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள கீழக்குயில்குடி ஸ்ரீனிவாசா காலனி கார்மேக நகரை சேர்ந்தவர் துரைசாமி (வயது 62). இவர் திண்டுக்கல்-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார். தினமும் காலை 5 மணிக்கு கடையைத் திறப்பது வழக்கம். சம்பவத்தன்று வழக்கம் போல் கடையை திறந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வடை கேட்டுள்ளனர். வடை போடுவதற்கு சிறிது நேரமாகும். காத்திருங்கள் என துரைசாமி கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் துரைசாமியை செங்களால் தாக்கி விட்டு, கடையில் இருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். துரைசாமி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார் கடைக்காரரை தாக்கி பணம் பறித்ததாக ஸ்ரீனிவாச காலனியைச் சேர்ந்த ராஜா மகன்கள் காசிநாதன் (20), நரேஷ் (19) ஆகியோரை செய்தனர்.