கலவரத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது
கனியாமூர் பள்ளி கலவரத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி கலவரம் நடந்தது. இந்த கலவரத்தின் போது பள்ளி சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் தூண்டியவர்களை கண்டறிந்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து வருகின்றனர். அதன்படி பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியதாக சின்னசேலம் அருகே மரவாநத்தத்தை சேர்ந்த சிவகுமார் (வயது 21), சீனிவாசன் (21) ஆகியோரை சிறப்பு புலனாய்வு போலீசார் நேற்று கைது செய்தனர்.