அரசு பஸ் மீது கார் மோதி 2 பேர் காயம்

அரசு பஸ் மீது கார் மோதி 2 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-05-09 19:08 GMT

ஈரோட்டில் இருந்து மதுரை நோக்கி நேற்று அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி இந்திரா நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பள்ளப்பட்டிக்கு திரும்பும்போது கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் அரசு பஸ்சின் பின்புறம் மோதியது. இதில் கார் டிரைவர் நாமக்கல் மாவட்டம் தில்லைநகரை சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 29), இவரது அக்கா அனுஸ்ரீ (30) ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர். இதையடுத்து காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பஸ் சென்ற பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்