தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை

தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2023-01-28 19:35 GMT

காட்டுப்புத்தூர் அருகே உள்ள கிடாரத்தை அடுத்த சூரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி விஜயா (38). சக்திவேலுக்கு மதுபழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் வீட்டின் பின்பு உள்ள மரத்தில்சக்திவேல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் திருச்சி கிராப்பட்டி சிம்கோ காலனியை சேர்ந்தவர் கணேசன் (59). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்