கஞ்சா விற்றவர் உள்பட 2 பேர் கைது
கஞ்சா விற்றவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சித்துடையார் கிராமத்தில் கஞ்சா விற்பதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் குவாகம் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ் (வயது 49) என்பவர் ஒரு சிறுவனுக்கு கஞ்சா விற்பதை போலீசார் கண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் பால்ராஜிடம் இருந்து 23 கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர். பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து செந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.