ரேஷன் அரிசி கடத்தியதாக பெண் உள்பட 2 பேர் கைது

ராணிப்பேட்டையில் ரேஷன் அரிசி கடத்தியதாக பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-17 18:28 GMT

ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் மற்றும் வேலூர் சரக சுற்று காவல் படை போலீசார் ராணிப்பேட்டை - சித்தூர் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். காரை கூட் ரோடு பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது 2 பேர் ஆட்டோவில் மூட்டைகளை ஏற்றி கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர்.

அவர்கள் இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து ஆட்டோவை சோதனை செய்த போது, அதில் 20 மூட்டைகளில் சுமார் 1000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. விசாரணையில், அவர்கள் காட்பாடி தாலுகா சோமநாதபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த குணசேகரன் மனைவி சுமித்ரா (வயது 47) மற்றும் காட்பாடி தாலுகா பொன்னை காந்தி ரோடு மணி மகன் பூர்ணா (33) என்பது தெரியவந்தது.

இவர்கள் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் ரேஷன் அரிசியை சேகரித்து அதிக விலைக்கு வெளிமாநிலங்களில் விற்பனை செய்வதற்காக கடத்திச் செல்வதை ஒப்புக்கொண்டனர். அதைத் தொடர்ந்து ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்து வாலாஜா நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

இது குறித்து ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவில் வழக்குப்பதிவு செய்து சுமித்ரா, பூர்ணா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்