வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை

கரூர் பகுதியில் வெவ்வேறு சம்பவத்தில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2023-08-31 18:37 GMT

வாலிபர் தற்கொலை

கரூர் திருமாநிலையூரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 37). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று அய்யப்பன் தனது மனைவியிடம் குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த அய்யப்பன் வீட்டில் தூக்கில் தொங்கினார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அய்யப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

கரூர் சுங்ககேட் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (43). கூலி தொழிலாளியான இவர், தனது மனைவியிடம் அடிக்கடி குடிப்பதற்கு பணம் கேட்டு வந்துள்ளார். இதனால் வீட்டில் குடும்ப பிரச்சினை இருந்துள்ளது. இதேபோல சம்பவத்தன்றும் சக்திவேல் தனது மனைவியிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு மனைவி பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்த சக்திவேல் எலி மருந்தை தின்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்து தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆலகுராம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

மேலும் செய்திகள்