பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் வேன் புகுந்து மாணவி உள்பட 2 ெபண்கள் பலி

இருக்கன்குடி கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு வந்த பக்தர்கள் கூட்டத்தில் வேன் புகுந்து மாணவி உள்பட 2 பெண்கள் உயிரிழந்தனர். ேமலும் ஒரு பெண் படுகாயம் அடைந்தார்.;

Update: 2023-08-11 18:45 GMT

தாயில்பட்டி

இருக்கன்குடி கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு வந்த பக்தர்கள் கூட்டத்தில் வேன் புகுந்து மாணவி உள்பட 2 பெண்கள் உயிரிழந்தனர். ேமலும் ஒரு பெண் படுகாயம் அடைந்தார்.

பாதயாத்திரை

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு, ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி பல்ேவறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம்.

வெம்பக்கோட்டை அருகே நதிக்குடி பகுதியில் ஆத்தூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவினர், இருக்கன்குடிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

தாயில்பட்டி, சாத்தூர் மெயின் ரோடு வழியாக நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்து வந்தனர். பூசாரி நாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, பின்னால் வந்த ஒரு ேவன் திடீரென பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது.

2 பெண்கள் பலி

இதில் கனி என்பவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 40), அந்த வேன் மோதி உடல் நசுங்கி பலியானார். மேலும் சுப்புராஜ் என்பவருடைய மனைவி முத்துலட்சுமி (40), இவருடைய மகள் சண்முகப்பிரியா (16) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

காயம் அடைந்த 2 பேரை மற்ற பக்தர்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்சு மூலம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதில் சண்முகப்பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய தாய் முத்துலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான சண்முகப்பிரியா 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

விசாரணை

இச்சம்பவம் குறித்து பாக்கியமுத்து கொடுத்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் வழக்கு பதிவு செய்தார். அந்த வேனை ஓட்டிவந்தது, தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த கோபி (27) என தெரியவந்தது. அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் வேன் புகுந்து மாணவி உள்பட 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்