வெவ்வேறு விபத்துகளில் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலி

நெல்லை மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2023-05-09 23:11 GMT

சுடலைமணி 

அம்பை:

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அடையகருங்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் குமார் மகள் ரம்யா (வயது 20). இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது அண்ணன் மனைவி பிலோமீனா, மகள் ஹென்சி ஆகியோருடன் நேற்று மாலை மொபட்டில் சென்று கொண்டு இருந்தார்.

அம்பை எல்.ஐ.சி. அலுவலகம் அருகில் சென்ற போது, அந்த வழியாக வந்த மினிபஸ் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரம்யா பலத்த காயம் அடைந்தார். மற்ற 2 பேரும் காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மானூர் அருகே உள்ள மேல இலந்தக்குளத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சுடலைமணி (29). இவர் தனது மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு நெல்லைக்கு வந்துவிட்டு ஊருக்கு திரும்பினார். குத்தாலப்பேரி விலக்கு பகுதியில் வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட சுடலைமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்