பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுவன் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு

பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2022-07-24 19:03 GMT

கீரனூர்:

கீரனூரை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியை, 16 வயது சிறுவன் மற்றும் முருகேசன் (வயது 38) என்பவரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அந்த மாணவிக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து மாணவியின் தந்தை கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்ேபரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, முருகேசன், சிறுவன் இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்