விபத்தில் 2 பேர் பலி

நெல்லை அருகே விபத்தில் 2 பேர் பலியானார்கள்.;

Update: 2023-10-15 19:00 GMT

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (35). டிரைவரான இவர் பழைய லோடு ஆட்டோவை விலைக்கு வாங்கி, அவற்றில் உள்ள பழுதுகளை சரிசெய்து புதுப்பிப்பதற்காக நெல்லையில் உள்ள ஒர்க்ஷாப்பில் விட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவில் லோடு ஆட்டோவை சரி செய்த பின்னர் அதனை தனது ஊருக்கு ஓட்டிச் சென்றார். அப்போது வெள்ளூரைச் சேர்ந்த வேலுமயில் (46) என்பவரையும் லோடு ஆட்டோவில் அழைத்து சென்றார்.

நெல்லை -திருச்செந்தூர் ரோட்டில் பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரத்தை அடுத்த ஆச்சிமடம் குளத்துகரை அருகில் சென்றபோது, திருச்செந்தூரில் இருந்து நெல்லை நோக்கி சென்ற வேன் எதிர்பாராதவிதமாக லோடு ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இதில் லோடு ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. இதில் ராமச்சந்திரன், வேலுமயில் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

கைது

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து சென்று, ராமச்சந்திரன், வேலுமயில் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி ராமச்சந்திரன், வேலுமயில் இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேனை ஓட்டி வந்த மானூர் பள்ளமடை பகுதியைச் சேர்ந்த டிரைவர் அண்ணாவி முத்துவை கைது செய்து நடத்தி விசாரணை வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்