வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் பலி

சிவகாசி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் பலியாகினர்.

Update: 2023-05-09 19:23 GMT

சிவகாசி, 

சிவகாசி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் பலியாகினர்.

தொழிலாளி பலி

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் சவுரிராஜன் (வயது 35). பட்டாசு தொழிலாளியான இவர் திருத்தங்கல் ரெயில்வே கேட் அருகில் ரெயில்பாதையை கடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த தாம்பரம்-கொல்லம் ரெயிலில் சிக்கி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மற்றொரு சம்பவம்

அதேபோல சிவகாசி அருகே உள்ள போடுரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (33). லாரி டிரைவரான இவர் தனது லாரியை சம்பவத்தன்று சிவகாசி-வெம்பக்கோட்டை ரோட்டில் நிறுத்தி விட்டு அருகில் உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பேர்நாயக்கன்பட்டியை சேர்ந்த மோகன் (58) என்பவர் லாரியில் மோதியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து லாரி டிரைவர் கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்