வெவ்வேறு விபத்தில் 2 பேர் பலி

வெவ்வேறு விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.;

Update: 2023-08-24 22:03 GMT

துவாக்குடி:

திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்த டோமினிக் சேவியரின் மகன் சுதர்சன் (வயது 21). இவர் சம்பவத்தன்று இரவு தனது நண்பரை பார்த்துவிட்டு மொபட்டில் வந்து கொண்டிருந்தார். பழங்கனாங்குடி அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த வாகனம் மொபட் மீது மோதியதில் சுதர்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டம், மாரம்பாடியை சேர்ந்த தாமஸ்(51) வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்றார். நடுப்பட்டியை அடுத்த கீரனூர் பகுதியில் ெரயில்வே தண்டவாளம் அருகே இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது, அவர் மீது ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்