ஊட்டி
ஊட்டி மத்திய போலீஸ் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீசார் மான் பூங்கா பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த முதியவர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்தார். அவரை பிடித்து சோதனை செய்தபோது கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் ஊட்டியை சேர்ந்த அவினாஷ் (வயது 60) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல் குன்னூர் ஸ்டான்லி பார்க் பகுதியில் கஞ்சா விற்ற குன்னூர் வசம்பள்ளத்தை சேர்ந்த, பிரித்திவிராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.