மாற்றுத்திறனாளியிடம் ரூ.16 ஆயிரம் பறித்த வழக்கில் 2 பேர் கைது

மாற்றுத்திறனாளியிடம் ரூ.16 ஆயிரம் பறித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-14 09:17 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்தவர் சிவானந்தபெருமாள். மாற்றுதிறனாளி. இவர் கடந்த வாரம் சனிக்கிழமை உப்பு வியாபாரம் செய்த பணத்துடன் காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த வைப்பனை கிராம சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை தாக்கி அவரிடம் இருந்த ரூ.16 ஆயிரம் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் 2 பேர் பறித்து சென்றனர்.

இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் உத்திரமேரூர் அருகே மானாம்பதி கூட்டுசாலையில் நேற்று முன்தினம் இரவு உத்திரமேரூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 2 பேரை மடக்கி பிடித்து அவர்களை விசாரணை செய்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். அவர்களை உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அ.பி.சத்திரம் கிராமத்தை சேர்ந்த விஜி என்கிற விக்னேஸ்வரன் (வயது 20) மற்றும் அரசன் நகர் பகுதியை சேர்ந்த அரசு கல்லூரி மாணவர் விஜய் (21) என்பது தெரியவந்தது.

அவர்கள் இருவரும் மாற்றுத்திறனாளியை தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்