டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் கொள்ளை வழக்கில் 2 பேர் கைது

டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் கொள்ளை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-07-03 22:13 GMT

மலைக்கோட்டை:

கொள்ளை

திருச்சி கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட சஞ்சீவி நகரில் உள்ள நேரு நகரை சேர்ந்த நாராயணனின் மனைவி கற்பகவல்லி(வயது 40). இவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். நாராயணன் ஏற்கனவே இறந்துவிட்டார். கடந்த 1-ந்தேதி இரவு வீட்டில் கற்பகவல்லி மற்றும் அவரது குடும்பத்தினர் இருந்தனர்.

அப்போது குல்லா, முகமூடி அணிந்து வீட்டில் புகுந்த ஒரு கும்பல், அங்கிருந்த குடும்பத்தினரை கட்டிப்போட்டுவிட்டு, பீரோவில் இருந்த 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில், கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி, சந்தேகத்திற்கு இடமான நபர்களை பிடித்து விசாரித்தனர்.

2 பேர் கைது

இதில் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரான திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் கதிரேசன் ஆகிய 2 பேரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்தை மீட்டதோடு, ஆயுதங்கள், 2 இருசக்கர வாகனங்களை கைப்பற்றினர். மேலும் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருச்சி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க, இன்ஸ்பெக்டர் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்