செல்போன் திருட முயன்ற 2 பேர் கைது
பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் திருட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
புளியங்குளத்தை சேர்ந்தவர் விஜயகுமாரி (வயது 21). இவருடைய சகோதரர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தேவையான உதவிகளை விஜயகுமாரி உடன் இருந்து கவனித்து வந்தார்.
இந்தநிலையில் நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையை சேர்ந்த தமீம் அன்சாரி (27), முறப்பநாட்டை சேர்ந்த முகமது முகைதீன் (29) ஆகியோர் விஜயகுமாரியின் சகோதரர் கைப்பையில் இருந்த 3 செல்போன்களை திருட முயற்சிக்கும்போது கையும் களவுமாக பிடிபட்டனர்.
இதுகுறித்து விஜயகுமாரி கொடுத்த புகாரின் பேரில் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அன்னராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தமீம் அன்சாரி, முகமது முகைதீன் ஆகியோரை கைது செய்தார்.