பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-08 19:54 GMT

சேரன்மாதேவி:

பத்தமடை அருகே உள்ள மணிமுத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பத்திரகாளி (வயது 59). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த காசிராஜா (36), கணேசன் (35) ஆகியோருக்கும் பொது பாதை சம்பந்தமாக நிலப்பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பத்திரகாளியையும் அவரது மகன்களையும், காசிராஜா, அவரது மனைவி, கணேசன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அவதூறாக பேசி, கல்லால் தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பத்திரகாளி, பத்தமடை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி காசிராஜா, கணேசன் ஆகிய இருவரையும் கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்