பன்றி திருடிய 2 பேர் கைது

பன்றி திருடிய 2 பேைர போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-07-06 20:01 GMT

சிவகாசி, 

சிவகாசி கவிதாநகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் வெம்பக்கோட்டை ரோட்டில் பன்றிக்கறி விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இதற்கிடையில் ராணி அண்ணா காலனியில் உள்ள உறவினர் வீட்டின் அருகில் பன்றிகளை வளர்த்து வந்துள்ளார். இந்தநிலையில் சிவக்குமார் வளர்த்து வந்த 2 பன்றிகள் திடீரென காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த 2 பேர் பன்றிகளை திருடி சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த கலையரசன் (வயது 30), கற்பகராஜா (32) ஆகியோரை கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்