இரும்பு கதவை திருடி சென்ற 2 பேர் கைது
இரும்பு கதவை திருடி சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
அறந்தாங்கி அருகே திருநாலூர் வடக்கு மேல குடியிருப்பை சேர்ந்தவர் கருணாநிதி மகன் அஜித்குமார் (வயது 27), அறந்தாங்கி அண்ணா நகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஹாஜா சாகுல் ஹமீது (52). இவர்கள் இருவரும் சரக்கு வேனில் வந்து கொண்டிருந்த போது, ஆலங்குடி அருகே உள்ள நம்பம்பட்டியில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் மோட்டார் அறையின் இரும்பு கதவை உடைத்து அதை சரக்கு வேனில் ஏற்றி திருடி சென்றனர். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவர்களை விரட்டி பிடித்தனர். பின்னர் அஜித்குமார், ஹாஜா சாகுல் ஹமீது ஆகிய 2 பேரையும் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அஜித்குமார், ஹாஜா சாகுல் ஹமீது ஆகியோர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.