ஆடு திருடிய 2 பேர் கைது

திசையன்விளை அருகே ஆடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-14 20:01 GMT

திசையன்விளை:

திசையன்விளை அருகே ஆத்துக்குறிச்சியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் நேற்று மாலை முடவன்குளம் மேற்கு பகுதியில் உள்ள கோழிப்பண்ணை அருகில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தெற்கு வள்ளியூர் இசக்கியப்பன் மகன் நம்பி (வயது 32), மாடசாமி மகன் பொன்னு (34) ஆகியோர் மேய்ச்சலில் நின்று கொண்டிருந்த ஆட்டை திருடி சென்றுள்ளனர். அதை பார்த்த ஆறுமுகம் அவர்களை துரத்தி சென்று பிடித்து சென்று, இருவரையும் திசையன்விளை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அவர்கள் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்