இரும்பு கடையில் திருடிய 2 பேர் கைது
அறந்தாங்கி அருகே இரும்பு கடையின் பூட்டை உடைத்து திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.;
திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மேலப்பட்டு பகுதியில் ரமேஷ் (வயது 48) என்பவர் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு இரும்பு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் வழக்கம்போல் நேற்று காலையில் கடையை திறப்பதற்காக ரமேஷ் வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிச்சியடைந்த அவர் கடையின் உள்ளே சென்று பார்த்த போது, கடையில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான இரும்பி கம்பிகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
2 பேர் கைது
இதுகுறித்து அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் ரமேஷ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடையில் இருந்த இரும்பு கம்பிகளை திருடியது அறந்தாங்கி தாலுகா வன்னியபிள்ளை கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் பழனி (26), அதே பகுதியை சேர்ந்த குமாரவேல் மகன் அஜித்குமார் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.