விக்கிரவாண்டியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
விக்கிரவாண்டியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் தலைமையிலான போலீசார் விக்கிரவாண்டி-திருச்சி மெயின் ரோட்டில் உள்ள எலைட் டாஸ்மாக் கடை அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடை அருகே மோட்டார் சைக்கிளுடன் நின்ற வாலிபர்கள் 2 பேர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த முனியன் மகன் சிபிசெல்வன்(வயது 18), ஜெயசங்கர் மகன் சதீஷ்(20) ஆகியோர் என்பதும், விக்கிரவாண்டி மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த நவீன் என்பவருடைய மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளையும் மீட்டனர்.