மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
மதுரையில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
மதுரை,
மதுரை புதூர் சூர்யா நகர் ஸ்ரீமுத்தப்பா நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (வயது 42). இவரது மகன் வீட்டின் முன்பு இரவு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலையில் பார்த்த போது அந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து அவர் திருப்பாலை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிள் திருடியதாக ஒத்தக்கடை சுதந்திர நகர் ராஜேஸ்வரன் (20), ஒத்தக்கடை அய்யப்பா நகர் அஜய் (20) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.