மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-08 18:45 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை ரெயில்வே கேட் அருகில் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்ததில் அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் இருவரும், விழுப்புரம் அருகே வேடம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் அருண்குமார் (வயது 22), கொங்கராயநல்லூரை சேர்ந்த குப்பன் மகன் கார்த்திகேயன் (40) என்பதும், விழுப்புரம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு வழக்கில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்