கள் விற்ற 2 பேர் கைது

கள் விற்ற 2 பேர் கைது;

Update: 2023-01-22 18:45 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே சொக்கனூர், கோவிந்தநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் உள்ள தென்னந்தோப்புகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த தென்னந்தோப்புகளில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது கோவிந்தநாயக்கனூரில் செல்வகுமார்(வயது 43) என்பவரிடம் இருந்து 5 லிட்டர் கள், சொக்கனூரில் ஜெயக்குமார்(51) என்பவரிடம் இருந்து 5 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்