லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-04-19 18:34 GMT

கறம்பக்குடி பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில் மாவட்ட சிறப்பு காவல் குழுவினர் கறம்பக்குடி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கறம்பக்குடி அருகே உள்ள சூரக்காடு கிராமத்தில் லாட்டரி சீட்டுகள் விற்ற சுப்பிரமணியன் (வயது 50), சதானந்தன் (48) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்