லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மலைக்கோட்டை:
திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் நேற்று திருச்சி ஜாபர்ஷா தெரு பகுதியில் அன்றாட ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு டீக்கடை அருகில் சந்தேகப்படும்படி நின்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், ஸ்ரீரங்கம் தாலுகா அதவத்தூர் பகுதியை சேர்ந்த மணி(வயது 43), ஜாபர்ஷா தெரு ஓமந்த பிள்ளை சந்தை சேர்ந்த சுந்தர் (46) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் சோதனை செய்தபோது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு எண்கள் எழுதப்பட்ட சீட்டுகள் மற்றும் ரூ.1000 இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.