லாட்டரி சீட்டு விற்றவர் கைது

தலைஞாயிறு பகுதியில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-07-14 18:45 GMT

வாய்மேடு:

தலைஞாயிறு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தலைஞாயிறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தலைஞாயிறு அருகே அருந்தவம்புலம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் அங்கு நின்று கொண்டிருந்து ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தியதில் அவர் திருத்துறைப்பூண்டியை சேரந்த பாண்டியன் (வயது 50) என்பதும், அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து பாண்டியன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்