மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது

திருக்கோவிலூரில் மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-04-04 18:45 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் சந்தப்பேட்டை ஜீவா நகர் பகுதியில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.  அங்கு மதுபாட்டில்கள் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த ரத்தினம் (வயது 43) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் பல்லவாடி கிராமத்தில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு மதுபாட்டில்கள் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த சேகர் (53) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்