மதுபானம் விற்ற 2 பேர் கைது

வீரபாண்டி, போடி பகுதிகளில் மதுபானம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-27 18:45 GMT

வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகுலகண்ணன் தலைமையில் போலீசார் வீரபாண்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கையில் பையுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து சோதனை செய்தனர். அதில் பையில் மதுபாட்டில்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், வீரபாண்டி அருகே உள்ள முத்துதேவன்பட்டியை சேர்ந்த மகேந்திரன் (வயது 52) என்பதும், மதுபானம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், போடி நகர் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தனியார் திருமண மகால் அருகே உள்ள பெட்டிக்கடையில் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கடையில் சோதனை நடத்தினர். அதில், 5 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கடை உரிமையாளரான போடி நகராட்சி பேட்டை தெருவை சேர்ந்த மோகன் (58) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்