ராஜபாளையத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

ராஜபாளையத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-06 20:32 GMT

ராஜபாளையம்,

சேத்தூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் சாமி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஒரு பள்ளி அருகில் சந்தேகத்தின் பெரில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் கஞ்சா விற்றது தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த 60 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சேத்தூர் பகுதியை சேர்ந்த சிவகணேசன் (வயது 23) என்பவரை சேத்தூர் போலீசார் கைது செய்தனர். அதேபோல ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த இந்திரா (60) என்ற பெண்ணை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்கள், ரூ.1,500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்