கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

கல்லிடைக்குறிச்சியில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-05 18:53 GMT

அம்பை:

கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த சங்கர் (வயது 20), நாகராஜன் (23) வந்தனர். மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது, அதில் 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து  போலீசார், 2 பேரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்