கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
விழுப்புரம் ரெயில் நிலையம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது;
விழுப்புரம்
விழுப்புரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி மற்றும் போலீசார் விழுப்புரம் ரெயில் நிலையம் அருகில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அங்கே சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 மர்ம நபர்களை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர்கள் கடலூர் மாவட்டம் வடலூர் தாலுகா சேப்ளாநத்தம் கீழ் பாதியை சேர்ந்த சேகர் மகன் மணிகண்டன்(வயது 24), கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா செங்குறிச்சி கர்ணன் மகன் புவனேஸ்வர்(25) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் 150 கிராம் கஞ்சாவைவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.