பிக்பாக்கெட் அடித்த 2 பேர் கைது

பிக்பாக்கெட் அடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-20 19:15 GMT

கரூர் அருகே உள்ள மண்மங்கலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரவிவர்மன் (வயது 42). இவர் சம்பவத்தன்று கரூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஈரோட்டைச் சேர்ந்த மணிகண்டன் (35) மற்றும் நந்தகுமார் (29) ஆகிய இருவரும் சேர்ந்து ரவிவர்மனிடம் பேச்சு கொடுப்பதுபோல் நடித்து அவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பணத்தை பிக்பாக்கெட் அடித்துள்ளனர். இதனை அடுத்து இதுகுறித்து ரவிவர்மன் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் வழக்குப்பதிவு செய்து பிக்பாக்கெட் அடித்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்