மூதாட்டியிடம் நகைபறித்த 2 பேர் கைது
மூதாட்டியிடம் நகை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
கன்னங்குறிச்சி:-
சேலம் சின்னத்திருப்பதி பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் நசீர் ஜஹான் (வயது 82). இவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று காலையில் வீடு வாடகைக்கு கேட்பது போல் 2 பேர், நசீர் ஜஹான் வீட்டுக்கு வந்தனர். அப்போது நசீர் ஜஹான் அணிந்து இருந்த தங்க சங்கிலி, வளையல், கம்மல், மோதிரம் உள்ளிட்ட 15½ பவுன் நகைகளை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மூதாட்டியிடம் நகைபறித்ததாக சின்னத்திருப்பதியை சேர்ந்த முஸ்தபா (27), அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (28) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது திருட்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.