பட்டாசு தயாரித்த 2 பேர் கைது

பட்டாசு தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-12-18 19:35 GMT

சிவகாசி, 

சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முருகன் காலனியை சேர்ந்த முத்தையா மகன் அய்யாசாமி (வயது 47) என்பவர் உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது நாரணாபுரம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த பாண்டியராஜ் (32) என்பவர் பேன்சிரக பட்டாசுகளுக்கு பயன்படுத்த தேவையான மணிமருந்துகளை அனுமதியின்றி தயார் செய்ததாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து பாண்டியராஜை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்