நாட்டாண்மையை தாக்கிய 2 பேர் கைது

செய்யாறு அருகே நாட்டாண்மையை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-31 15:21 GMT

செய்யாறு

செய்யாறு தாலுகா பெரியவேலியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகாந்தன் (வயது 40), ஊர் நாட்டாண்மை. அந்த பகுதியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

அதே பகுதியை சேர்ந்த தனசேகர் (54), அவரது மகன்கள் தங்கராஜ் (27), இளையகுமார் (23), உறவினர் தனபால் (70) ஆகியோர் பேனரில் எங்கள் புகைப்படம் ஏன் போடவில்லை என கேட்டு ஜெயகாந்தனிடம் தகராறு செய்துள்ளனர்.

வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த அவர்கள் ஜெயகாந்தனை இரும்பு ராடால் தாக்கியுள்ளனர்.

இதனை தடுத்த ஜெயகாந்தனின் தந்தை பெருமாள், தாயார் தங்கமணி, அண்ணன் ஜெயக்குமார் ஆகியோரையும் அவர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த 4 பேரும் செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து ஜெயக்குமார் செய்யாறு போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜ், இளையகுமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

மேலும் தனபால் மற்றும் தனசேகர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்